நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.;

Update: 2024-02-05 09:51 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க கூட்டணியில்தான் தங்கள் அணி நீடிப்பதாக கூறி வருகிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

" .நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்