நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர முயற்சி எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமை தாங்கினார். தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், கணேசன், சக்தி பிரபாகரன், மாரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.