விழுப்புரத்தில்நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி நதிநீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் விக்ரம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் செல்வம், தொகுதி தலைவர் தெய்வசிகாமணி, செயலாளர் முனுசாமி, வக்கீல் பாசறை நிர்வாகிகள் பேச்சிமுத்து, குருநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.