நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-23 18:45 GMT

தூத்துக்குடி தாமுத்துநகர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. இந்த டாஸ்மாக் கடை பளளிக்கூடம் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு மிகவும் அருகில் அமைந்து உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. ஆகையால் அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் செந்தில்குமார், ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம் தொகுதி தலைவர் வைகுண்டமாரி, தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்கியராஜ், லிட்டில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்