"பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்"- முன்னாள் அமைச்சர் பொன்னையன்
பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறி உள்ளார்.
சென்னை
பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வட மாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும்.பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனித்து தான் போட்டியிட்டது என கூறினார்