வழியடி கருப்பண்ண சாமி கோவில் கும்பாபிஷேகம்

வழியடி கருப்பண்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-03-03 19:25 GMT

திருச்சி அருகே துவாக்குடி மலையில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேகத்தை தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்று கால யாகபூஜை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக 4-ம் கால யாகபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விமானகலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துவாக்குடி நகராட்சி தலைவர் இ.காயாம்பு, ஆணையர் பட்டுசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வித்யா, சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் மற்றும் கோவில் பூசாரி ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்