நீர்நிலை ஆக்கிரமிப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த துளாராங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சூரியமணல் பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டி குட்டை நீர்நிலை வாரியானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி நீர் செல்லும் பாதையை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.