நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம் நடந்தது.;

Update:2023-10-23 00:15 IST

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம், தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம் 3 மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு எடுத்து செல்வது எனவும், 2022-23-ம் ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களின் வரத்துக்கு கால்வாய்களை தூர்வார வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் துணைத்தலைவர்கள் உகந்தான்குடி ராமநாதன், நாகனேந்தல் விசுவநாதன், பாரனூர் சரவணன், துணை செயலாளர் பால்ராஜ், சிறுவண்டல் முருகானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்