குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

வெள்ளியணை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-28 18:37 GMT

வீணாகும் குடிநீர்

கரூர் மாவட்டம், கட்டளை பகுதி காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் நகரம் மற்றும் வேடசந்தூர் பகுதிகளுக்கு வெள்ளியணை வழியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குடிநீர் வெளியேறி வருகிறது. கடந்த சில வாரங்களாக இப்படி வெளியேறும் குடிநீரால் அந்தப் பகுதியில் உள்ள கரூர்-திண்டுக்கல் சாலை சேதம் அடைந்து வருகிறது. மேலும் வெளியேறும் நீர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்