ஊராட்சி செயலாளர்களுக்கு குடிநீர் பரிசோதனை பயிற்சி

அணைக்கட்டு ஒன்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு குடிநீர் பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-01-23 17:54 GMT

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களுக்கு குடிநீர் பரிசோதனை செய்வது குறித்து ஒரு நாள் பயிற்சி நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் வரவேற்று பேசினார். இதில் 51 ஊராட்சிகளை சேர்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர். வேலூர் கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வேதியியல் ஆய்வாளர்கள் வரலட்சுமி, பிரபு ஆகியோர் குடிநீரை எப்படி பரிசோதனை செய்வது, குடிநீரில் எந்த அளவிற்கு கிருமிகள் உள்ளது, உப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டறிவதற்கான பயிற்சியலித்து, உபகரணங்களை வழங்கினர்.

மாதத்திற்கு ஒரு முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்து, அந்த சோதனை அறிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தண்ணீரில் எந்த அளவிற்கு உப்பு மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கான மருந்துகளை குடிநீரில் கலந்து கிருமிகளை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என வேதியியல் ஆய்வாளர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்