குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
சிவகாசி அருகே உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது;
தாயில்பட்டி,
மானூர் கூட்டு குடிநீர் திட்டம் செவல்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சிவகாசிக்கு செல்லும் குடிநீர் குழாய் இ. மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் உடைப்பு காரணமாக தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலி காரணமாக அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்து வால்வு அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து உடன் நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.