குடிநீர் குழாய் பதிக்கும் பணி
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து சுதந்திரநகருக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.;
கொடைக்கானல் நாயுடுபுரம் சுதந்திர நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி மூலம் தங்களது பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு, நாயுடுபுரம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து சுதந்திரநகருக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், கவுன்சிலர் கணேசன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.