குழாய் உடைந்து வீணான குடிநீர்

குழாய் உடைந்து வீணான குடிநீர்

Update: 2023-03-09 10:38 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 13-வது வார்டு காந்திநகர் சாய்பாபா கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாகியதை தடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்