குழாய் சேதத்தால் வீணாகும் குடிநீர்

வெம்பக்கோட்டையில் குழாய் சேதத்தால் வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-25 21:17 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் குழாய் சேதத்தால் வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டது.

இதனால் பல்வேறு இடங்களில் தினமும் தண்ணீர் வீணாக செல்கிறது. வெம்பக்கோட்டை மேம்பாலத்தின் அருகே குழாயில் ஏற்பட்ட சேதத்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாக செல்கிறது. இதனை பொதுமக்கள் பார்த்து வேதனை அடைந்தனர்.

வீணாகும் குடிநீா்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் படி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை அவ்வப்போது சரி செய்வதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

அதிகாரிகள் நடவடிக்கை

தற்போது வெம்பக்கோட்டை மேம்பாலத்தின் அருகே குழாயில் ஏற்பட்ட சேதத்தால் தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. இதனால் தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்