பள்ளப்பட்டி கண்மாயில் கழிவுகளை கொட்ட கூடாது

பள்ளப்பட்டி கண்மாயில் கழிவுகளை கொட்ட கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2022-10-17 19:59 GMT

சிவகாசி, 

சிவகாசி யூனியனில் உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளையும், கோழி இறைச்சிகளையும் கொட்டக் கூடாது. அறிவிப்பை மீறுபவர்கள் மீது பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் தொடங்கி விட்டதால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தினமும் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகளை வீச வேண்டாம். காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒரு பகுதி என பஞ்சாயத்து ஊழியர்கள் கொசு மருந்து அடிக்க வரும் போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்