இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா?
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கொட்டாமேடு வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் அனிதா(வயது 21). இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள் அனிதாவை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அனிதாவின் தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அனிதாவை தேடி வருகிறார்கள்.