5-வது வார்டில் பகுதி சபை கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-02 18:54 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் உள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் பகுதி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகர சபை தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர்மன்ற உறுப்பினரும் நகராட்சி நியமனக்குழு உறுப்பினருமான ஆர். எஸ். பாண்டியன், தி.மு.க. நகர துணை செயலாளர் ஓம் சக்திகண்ணன், நகர விவசாய அணி அமைப்பாளர் சி.எஸ்.பாலு, வார்டு பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா பெற்றுத்தர வேண்டும். திருவாரூர் சாலையில் கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என நகர சபை தலைவர் மற்றும் ஆணையர் உறுதி அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்