ராஜபாளையம்,
உலக நன்மை வேண்டி ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த மதத்தினர் இஸ்தானி, லீலாவதி, கிமுரா, நிப்போன்சான், மயோஹோஜி குழுவினர் கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி மதுரை காந்தி மியூசியம் வரை அமைதி நடைபயணம் மேற்கொள்கின்றனர். வரும் வழியில் பொது மக்களுக்கு அமைதி போதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை வழங்கினர். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, சங்கரன் கோவில் வழியாக ராஜபாளையத்திற்கு நேற்று மாலை வந்தடைந்தது. பின்னர் காந்தி கலை மன்றம், காந்தி சிலை ரவுண்டானா, பஞ்சு மார்க்கெட் பகுதிகளில் வள்ளலார் மன்றம் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இன்று நடைபயணம் தொடர்ந்து வருகிற 2-ந் தேதி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபயணம் நிறைவு பெறுவதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.