வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை
திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.;
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளி முதல்வர் அன்னதங்கம் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டனர். சரஸ்வதி பூஜை அன்று பள்ளியில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்துகொண்ட மாணவர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர். இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.