திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

Update: 2023-06-09 16:43 GMT


திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கன்டெய்னர் லாரிகள் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15 ஆண்டுகள் கடந்தவை

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. 15 ஆண்டுகளை கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைக்கும்படி தேர்தல்ஆணையம் வலியுறுத்தியதை தொடர்ந்து நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் 15 ஆண்டுகளை கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கெடுக்்கப்பட்டன.

துணை கலெக்டர் ராம்குமார் மேற்பார்வையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சோதனையிடப்பட்டன. நேற்று காலை தேர்தல் தனி தாசில்தார் தங்கவேல், மாநகராட்சி உதவி ஆணையாளர் சந்தானம் மற்றும் பணியாளர்கள் இந்த எந்திரங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

பின்னர் அந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டன.

1930 கன்ட்ரோல் யூனிட், 1263 பேலட் யூனிட் உள்பட ெமாத்தம் 3ஆயிரத்து 193 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை 4 கன்டெய்னர் லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன

மேலும் செய்திகள்