வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.;
திருப்பத்தூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி வழியாக பஸ் நிலையம் வரை சென்று கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் அரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) மோகன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.