தொழிற்சாலையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

திருப்பத்தூரில் வாசனை திரவம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 18:10 GMT

திருப்பத்தூரில் வாசனை திரவம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாந்தி, மயக்கம்

திருப்பத்தூரில், திருவண்ணாமலை சாலையில் உடையாமுத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே பூக்களில் இருந்து வாசனை திரவம் தயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து தினமும் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம், பொதுமக்கள், சார்பில் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது துர் நாற்றம் தாங்காமல் சில மாணவ- மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதில் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொழிற்சாலை நிர்வாகிகள் ஒரு வாரத்தில் துர்நாற்றம் வராமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்