தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-30 19:07 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குருதி கொடையாளர் குழுமம் சார்பில் தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 18 வயது முதல் 25 வயது வரை ஒரு பிரிவாகவும், 25 வயது முதல் 40 வயது வரை ஒரு பிரிவாகவும் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 350 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியானது கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி தாந்தோன்றிமலை, சுங்ககேட், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் கார்னர், உழவர்சந்தை, பஸ்நிலையம் ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவடைந்தது. மாரத்தான் போட்டியில் முதல் பரிசாக ரூ.8 ஆயிரம் மற்றும் பதக்கம் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம் மற்றும் பதக்கம் மற்றும் சான்றிதழ், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் பதக்கம், சான்றிதழ், 2 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்