கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா

கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா;

Update: 2022-12-22 18:45 GMT

கீழக்கரை

கீழக்கரை இஸ்லாமியா விளையாட்டு திடலில் கிரவுண்ட் சிக்ஸ் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் புதுச்சேரி ஒன் ஸ்டாப் சர்வீசஸ், கிரவுண்ட் சிக்ஸ் ஏ அணிகள் மோதின. இதில் ஒன் ஸ்டாப் சர்வீசஸ் அணி முதல் இடம், கிரவுண்ட் சிக்ஸ் ஏ அணி 2-ம் இடம் பிடித்தது. நவ்சாத் பிரண்ட்ஸ் அணி மூன்றாம் இடம், திருபாலைக்குடி அணி நான்காம் இடம், மாயாகுளம் சங்க பிரண்ட்ஸ் மாயாகுளம் அணி ஐந்தாம் இடம் பிடித்தன. முகமது ஹாதில் தலைமையில் இஸ்லாமிய கல்வி நிறுவன தாளாளர் முகைதீன் இபுராகிம் முன்னிலையில் கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவர் கபீர், நகராட்சி துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், கவுன்சிலர் பாதுஷா துபாய் ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின், தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹனிபா, நகர் இளைஞரனி துணை அமைப்பாளர் சுபியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்