தொழில் அதிபரிடம் ரூ.1 ேகாடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தம்பதியை கைது செய்ய டெல்லி போலீசார் வெள்ளகோவில் வந்தனர். ஆனால் வீட்டில் தம்பதி இல்லாததால் கதவில் நோட்டீைச ஒட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.1 கோடி ேமாசடி புகார்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவரது மனைவி திலகவதி. இவர்கள் 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் டெல்லி காந்திநகர் பகுதியை சேர்ந்த தொழில்அதிபர் புருஷோத்தன் ஷர்மா என்பவருடன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்கள் இடையே கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சரவணன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதியிட்ட வெள்ளகோவில் தனியார் வங்கியின் ரூ.30 லட்சம் காசோலையை புருஷோத்தமன் ஷர்மாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதிய பணம் இல்லை என்று காசோலை திரும்பிவிட்டதாகவும், அந்த வகையில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 769-ஐ கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக புருஷோத்தமன் ஷர்மா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி டெல்லி காந்திநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காந்திநகர் போலீசார் சரவணன், திலகவதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நோட்டீசு ஒட்டினர்
இந்த நிலையில் டெல்லி காந்திநகர் போலீசார் 3 பேர் மற்றும் புகார்தாரரான புருஷோத்தமன் ஷர்மா ஆகியோர் சரவணன்-திலகவதி தம்பதியை கைது செய்ய டெல்லியில் இருந்து நேற்று வெள்ளகோவில் வந்தனர். ஆனால் வீட்டில் அவர்கள் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் வீட்டின் கதவில் நோட்டீசை ஒட்டி விட்டுசென்றனர்.