விருதுநகர் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சாத்தூர் போலீஸ் நிலையங்களில் ஆய்வு
விருதுநகர் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சைக்கிளில் சென்று சாத்தூர் போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார்.;
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஏற்கனவே விருதுநகரில் நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையங்களில் அதிரடி ஆய்வு நடத்தினார். இந்தநிலையில் விருதுநகரில் இருந்து சாத்தூர் வரை 26 கி.மீ. சைக்கிளில் சென்று அங்குள்ள போலீஸ் நிலையங்களிலும் திடீர் ஆய்வு நடத்தினார். தற்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் இரவு நேரங்களில் போலீஸ்நிலையங்களில் நள்ளிரவு ஆய்வினை தொடரும் நிலையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் அதிகாரிகளும் போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர்.