விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும்

விருதுநகர் ரெயிவே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2023-09-29 21:00 GMT


விருதுநகர் ரெயிவே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை தலைவர் தனலட்சுமி துளசிராம், கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே கூட்டத்தின் போது ஒலிபெருக்கி வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை செய்து தரப்படாததால் கவுன்சிலர்கள் கலையரசன், முத்துராமன் உள்ளிட்டோர் கூம்பு வடிவ குழாய் மூலம் பேசினர். இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்திற்குள் ஒலிபெருக்கி வசதி செய்து தரப்படுமென தலைவர் மாதவன் மற்றும் கமிஷனர் லீனா சைமன் ஆகியோர் உறுதி கூறினர்.

சாலை சீரமைப்பு

எங்கு சென்றாலும் மக்கள் ெரயில்வே பீடர் சாலையை எப்போது சீரமைக்க போகிறீர்கள் என கேட்கும் நிலை உள்ளதால் அதனை உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென கவுன்சிலர்கள் முத்துராமன், முத்துலட்சுமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மாதவன் உறுதி அளித்தார்.

கவுன்சிலர் முத்துராமன் தனது வார்டில் வேலுச்சாமி நகரில் மின் மோட்டார் இயக்கப்படாததால் குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும், கவுன்சிலர் முத்துலட்சுமி தனது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் நோய் பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முறையாக நடைபெறவிலலை என புகார் கூறப்பட்டது.

பாதாள சாக்கடை இணைப்பு

கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார். பள்ளிகளில் நோய் பாதிப்பை தடுக்க பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டுமென கவுன்சிலர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் திறக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் பால்பாண்டி கொண்டு வந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்