விருதுநகர் வெடி விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்-அமைச்சர் அறிவிப்பு

விருதுநகர் வெடி விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Update: 2022-07-28 22:11 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதே விபத்தில் கடும் காயமடைந்த விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானீஸ்வரனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் மற்றும் கடும் காயமடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ.1 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்