சுதந்திர தினத்தை முன்னிட்டுவிருத்தாசலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.;

Update:2023-08-10 00:15 IST

விருத்தாசலம், 

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் இணைந்து தினமும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை துணை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் ராஜய்யா, ரெயில்வே இருப்புப்பாதை சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர் ராம்குமார், போலீஸ்காரர்கள் அருண்மொழி, ராதிகா உள்ளிட்ட போலீசார் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகள், நடைமேடை, தண்டவாளம் மற்றும் அவ்வழியாக வந்த ரெயில்களில் ஏறி மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்