பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின ஊர்வலம்
மயிலாடுதுறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின ஊர்வலத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின ஊர்வலத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
ஊர்வலம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி ஊா்வலத்தை தொடங்கி வைத்து அதில் கலந்து கொண்டார்.ஊர்வலத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பதாகைகள்
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷமிட்டு சென்றனர்.ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின திட்ட அலுவலர் பழனி, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா மற்றும் மகளிர் திட்ட அலுவலக உதவி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.