கண்கவர் வண்ணங்களில் 1500 விநாயகர் சிலைகள் தயாரிப்பு

கண்கவர் வண்ணங்களில் 1500 விநாயகர் சிலைகள் தயாரிப்பு

Update: 2022-08-23 12:00 GMT

அவினாசி

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவினாசியில் கண்கவர் வண்ணங்களில் பல்வேறு வடிவத்தில் 1500 வினாய கர்சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

அவினாசி யை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம். கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்

கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர் காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது


Tags:    

மேலும் செய்திகள்