விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுவதையோட்டி, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-09-04 03:39 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக ஈ.வி.ஆர். சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எம்.எஸ்.கோவில் தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பேசின்பிரிட்ஜ், வால்டாக்ஸ் சாலை, பழைய ஜெயில் சாலை, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடிமரச்சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலை, எல்.பி.சாலை, தரமணி சாலை, அண்ணாசாலை, பட் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு ஏற்ப தங்களது பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்லலாம்.

அடையாரில் இருந்து பாரிமுனைக்கு ராமகிருஷ்ணா மடம் சாலை வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணாசாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்லலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்