உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற 2-ம் வகுப்பு மாணவிக்கு கிராம மக்கள் வரவேற்பு

உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற 2-ம் வகுப்பு மாணவிக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைகல நாட்டார் தெருவை சேர்ந்த சரவணன்- அன்புரோஜா தம்பதியின் மகள் சர்வாணிகா. 7 வயதுடைய இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 35-வது தேசிய மாபெரும் சதுரங்க போட்டியில் தமிழ்நாடு சார்பில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டார். மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில்அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று இந்திய அளவில் முதலிடம் என்ற சாதனையை படைத்து, தமிழ்நாட்டிற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஆசிய, தெற்காசிய, காமன்வெல்த் மற்றும் உலகப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சர்வாணிகாவை ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்