நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-30 19:00 GMT

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை, ஒட்டுப்பட்டி கிராம மக்கள் நேற்று திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாசில்தார் தனுஷ்கோடியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் ஒட்டுப்பட்டியில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமம் அருகே உள்ள வெள்ளக்கரடு பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து வருகிறோம். இங்கு யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது. இதுகுறித்து கலெக்டரிடம் ஏற்கனேவே மனு கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்