இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-06 17:17 GMT

ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பலர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆதிராவிடர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா பேரின்பம் தலைமையில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் முருகானந்தம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பஞ்சமி நில மீட்பு அணி மாநில துணைசெயலாளர் பெரியசாமி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதிதிராவிடர நலத்துறை் தனி தாசில்தார் செல்வமணி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்