கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்த கிராம மக்கள்

முதுகுளத்தூர் அருகே கண்மாயில் இறங்கி உற்சாகமாக கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.;

Update: 2023-10-05 18:45 GMT

முதுகுளத்தூர்,


மீன்பிடி திருவிழா

முதுகுளத்தூர் அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கி உள்ளது.போதிய பருவமழை இல்லாததால் கண்மாய் நீர் தற்போது வற்றி வருகிறது. இதை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கண்மாய் கரையோரம் திரண்டனர்.

உற்சாகமாக மீன்பிடித்தனர்

ஊர்பெரியவர்கள், கண்மாய்க்குள் இறங்கலாம் என கொடி அசைத்தவுடன் கரையில் நின்றிருந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் கண்மாயில் இறங்கினார்கள். கண்மாயில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் கிராம மக்கள் தாங்கள் கொண்டு சென்ற மீன்பிடி சாதனங்களை கொண்டு உற்சாகமாக மீன்களை பிடிக்க தொடங்கினார்கள். 5 கிலோ எடை கொண்ட பெரிய கெண்டை மீன்களை வாலிபர்கள் உற்சாகத்துடன் பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட மீன்களை உற்சாகத்துடன் வீடுகளுக்கு எடுத்து சென்று சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இவ்வாறு மீன்பிடி திருவிழா நடத்துவதால் தொடர்ந்து மழை பெய்து கண்மாய் நிரப்பி விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்