வேகத்தடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்
வேகத்தடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்;
கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் வேகத்தடை இ்ல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். அந்த பகுதியில் நாய்-குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேகத்தடை அமைக்கக்கோரியும், நாய்-குரங்குகளை கட்டுப்படுத்தக்கோரியும் திருமங்கலக்குடியில் உள்ள கல்லணை பூம்புகார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.