நெல்லையில் 41 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் கிராமம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

நெல்லையில் 41 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் கிராமம். தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-10-17 09:52 GMT

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்து மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 1979-ம் ஆண்டு மின்சார வாரியத்தில் மனு அளித்ததாகவும், அதேபோன்னு பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு. மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் வகையில் வனத்துறை செயல்படக் கூடாது. மேலும், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக் வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்