கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கரூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கணேசன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட கால முறை அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அலுவலக உதவியாளர் பதவி உயர்வு 50 சதவீதம் வழங்க கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.