புது கேசாவரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

புது கேசாவரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-02 18:40 GMT

தக்கோலம் அடுத்த புதுகேசாவரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் நவாஸ் அகமது தலைமையில் நடை பெற்றது. இதில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ள பெருக்கில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றி வீரர்கள் செயல் முறை விளக்கம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறை ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் உமாமகேஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்