கிராம சபை கூட்டம்
சீர்காழி அருகே குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே எடக்குடி வடபாதி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார் ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன், துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.தொடர்ந்து ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் தெரு விளக்கு சாலை வசதி, சுகாதாரம் கட்டிட வசதி, மயான கொட்டகை, மயான சாலைகள், நீர்நிலைகள் தூர்வாருதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.