மன்னார்குடி:
மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாநில பயிற்சியாளர் ராஜா கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்,மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள்,அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து பேசினர்.