கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் தேர்வு எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை.

Update: 2022-12-04 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் தேர்வு எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை.

கிராம உதவியாளர்

கடந்த அக்டோபர் மாதம் கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆண்-பெண் உள்பட இரு பாலரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 7-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.திருவாரூர் மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகத்தில் உள்ள 167 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்காக 7,022 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வு எழுத வரவில்லை

இந்த நிலையில் எழுத்து தேர்வு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 5,313 பேர் எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்