ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது
துறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.;
துறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கிராம நிர்வாக அதிகாரி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மாராடி ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுமதி (வயது 34) சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர், இங்கு கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மாராடி புதுக்காலனியைச் சேர்ந்த சத்யா என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ரூ.7 ஆயிரம் பேரம் பேசப்பட்டது.
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரத்தை சத்யா சுமதியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி சுமதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.