தலையாம்பள்ளத்தில் கழிவுநீர் சூழ்ந்த கிராம நிர்வாக அலுவலகம்

தலையாம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலகம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் அதனை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-12 11:06 GMT

வாணாபுரம்

தலையாம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலகம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் அதனை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாம்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஊரில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் தெற்கு தெரு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றிலும் கழிவு நீர், குளம் போல் தேங்கி நிற்பதால் கிராம நிர்வாக அலுவலகம் வருபவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே கிராம நிர்வாக அலுவலகம் இருக்கும் இடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி மீண்டும் அதே இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்