விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-27 06:37 GMT

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமையும் என்பதால், பண விநியோகம், முறைகேடு உள்ளிட்டவற்றால் ஜனநாயகப் பூர்வமான தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என பல கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்தகைய குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே அதிகார பலத்தால், பணபலத்தை கொண்டு ஆளும் கட்சியினர் தேர்தலை எதிர்கொண்டனர். ஆகவே, விக்கிரவாண்டி தேர்தலும் ஆளும் கட்சி தலையீடு இன்றி ஜனநாயகப்பூர்வ முறையில் நடைபெற வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்