விஜயகரிசல்குளம் அகழாய்வில் கண்டெடுத்த பழங்கால பொருட்கள்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2023-08-02 20:00 GMT

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று தோண்டப்பட்ட குழியில் ஏராளமான பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்தன.

அதில் சமையல் பாத்திரமாக பயன்படுத்திய மண்பாண்ட பொருள் மற்றும் அதனை மூடுவதற்காக பயன்படுத்திய மூடி ஆகியவை முழுமையாக கிடைத்துள்ளன.

முதலாம் கட்ட அகழாய்வில் நிறைய மண்பாண்ட பொருட்கள் உடைந்த நிலையில் கிடைத்தன. ஆனால், தற்போது, முழுமையாக கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடிதட்டு என அழைக்கப்படும் பொருளும், முற்காலத்தில் வீட்டின் தரையை சமப்படுத்த பயன்படுத்திய வித்தியாசமான கல் உள்ளிட்டவையும் கிடைத்து உள்ளன. இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். இதுவரை 2,970 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்