விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தை வரவேற்று நாகை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி ஊழியர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்டித்து விஜய் மக்கள் இயக்க நாகை மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையிலான விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலைமறியல் கைவிடப்பட்டது.