திருவாரூர் அருகே கூத்தனூர் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்வு

சரஸ்வதி தேவிக்கென உள்ள பிரத்யேக கூத்தனூர் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2023-10-24 03:47 GMT

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயில், 2-ம் ராஜராஜ சோழனின் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்டது என தல வரலாறு கூறுகிறது. தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்கென கட்டப்பட்ட தனிக் கோயில் இது மட்டுமே.

சிறப்பு மிக்க இக்கோயிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். சரஸ்வதி பூஜையையொட்டி நேற்று, சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சரஸ்வதி அம்மனுக்கு வெள்ளை நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சரஸ்வதி அம்மனின் பாத தரிசனம் நடைபெற்றது. இந்தநிலையில், விஜயதசமியையொட்டி பெற்றோர் தங்கள் குழந்தைகளை சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து வழிபட்டனர். அப்போது, நெல் மணிகளைப் பரப்பி அதில் தமிழ் எழுத்துகளை எழுத வைத்து, படிப்பைத் தொடங்கி வைக்கும் வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி தேவியின் அருளால் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

Tags:    

மேலும் செய்திகள்