விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விடுதலை சிறுத்தைகள் கட்சி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் சேகுவேரா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது நாங்குநேரி, கழுகுமலையில் நடந்த மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், கவர்னரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.